அந்த காலத்தில் நம் மருத்துவர்கள் மனித உடலை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்கள்.
வாதம்
பித்தம்
சிலேத்துமம்
என்று இந்த மூன்று பிரிவுகளுக்குள் தான் நோய் ஏற்பட்டு அதற்குள்தான் அவதிப்பட்டு இறக்க வேண்டும் என்ற நிலையில் பிரித்து அமைத்துள்ளார்கள்.அவர்கள் அன்று எழுதிய பிரிவுகள் இன்று மட்டும் அல்ல, எந்த காலமும் எந்த சூழ்நிலையிலும் இம்மூன்று பிரிவுகளுக்குள்தான் என்றும் செயல்படும் என்பது சித்த ஆயுர்வேத மருத்துவத்தினர் இலக்கணம் ஆகும்.
பித்தம் என்பது மயக்கம், சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கக்கூடியது.
சிலேத்துமம் என்பது சளி இருமல், க்ஷயம், ஆஸ்த்துமா போன்ற நோய்களை உருவாக்கும் வழிமுறைகளைக் கொண்டது. வாதம் என்று மூட்டுவாதம், பாரிசவாதம், முக வாதம், முழங்கால் வாதம் இவைகளைப் போன்ற நோய்களை
உருவாக்கக்கூடிய வழி முறைகளைக் கொண்டது.
மூட்டு வாதம் என்றுதான் நாம் இந்த நோயை குறிப்பிடுகிறோம்.பாரிச வாதத்திற்கும் மூட்டு வாதத்திற்கும் தொடர்பு உண்டா? என்று கேட்கலாம். மூட்டு வாதத்திற்கும் பாரிச வாததத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சமயத்தில் மூட்டு வாதம் தீவிரம் அடைந்து தன் சுய ஆட்சியில் தீவிரம் அடையும் ஸ்டேஜில் மூட்டு வாதம் பாரிச வாதமாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
பாரிச வாதம் என்பது கை கால் அசைவு இல்லாமல் செயல்படாமல் வணங்காமல், போட்டது போட்ட மாதிரி பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்தம் ஓட்டம் ஓடாமல் ஜில் என்று ஆகிவிடும் நிலைக்குத்தான் பாரிச வாதம் என்று நாம் குறிப்பிடுகின்றோம். பாரிச வாதத்தை பெராலிஸிஸ் என்று குறிப்பிடுவது உண்டு. இதைப் பற்றிய விவரங்களை ஒரு பெரிய நூல் எழுதி வெளியிட்டு இருக்கின்றேன்.
மூட்டு வாதம் என்ற நோய் பொதுவாக முன்கூட்டியே காய்ச்சல் ஏற்பட்டு, உடலில் ஒவ்வொரு மூட்டுக்களில் வலி லேசாக உணர்வை தெரிவிக்கும். அப்போதே எச்சரிக்கையாக இருந்து இருந்தால், இந்த நோய் அதிகமாகாத அளவு தடுத்து நிறுத்தி வைக்கலாம். இன்று பார்க்கலாம், நாளை பார்க்கலாம், பணம் இல்லையே, சோம்பேறித்தனத்தாலும், கவனக்குறைவினாலும் வீட்டுவீட்டால் இந்த நோய் வெகு விரைவில் தீவிரம் அடைந்து அதிக வேதனையை உருவாக்கி வருகிறது.
மூட்டு வாதத்தை சர்வாங்க வாதம் என்று சித்தர் நூல்களை குறிப்பிடுகிறது. சர்வ+அங்க+வாதம். அதாவது, உடலில் ஒவ்வொரு மூட்டுக்களில் ஏற்படும் வலிகளைத்தான் உடலில் ஒவ்வொரு அங்கங்களில் ஏற்படும் வாத உணர்வைத்தான் சர்வ- அங்க-வாதம் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.
இதற்கு நிறைய வேறு பல பெயர்களும் உண்டு. கிராமப் புறங்களில் இதை புதுமையான பெயர்களை வைத்து பல் அழைப்பார்கள். சரவாங்கி என்று சிலர் அழைப்பார்கள். நரிதலைவாத நோய் என்று சிலர் குறிப்பிடுவார்கள். நரி தலையைப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும். அதனால் இதற்கு அந்த பெயரை காரணப் பெயராக வைத்து அழைக்கின்றார்கள். ஈ ஓட்ட வியாதி என்று குறிப்பிடுகின்றார்கள். கூட இதை சில ஊர்களில்
சர்வாங்கவாதம் உள்ளபோது இந்த நோயினால் அவதிப்படும் நிலையில் மூட்டு வாதத்தின் மீது வந்து உட்கார்ந்தால் கூட வலி தோன்றுமாம். இதனால் இதற்கு இப்பெயர் வைத்து பலர் அழைக்கின்றார்கள். பல் வேறு பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
No comments:
Post a Comment