சில ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வீட்டினுள் படுக்க மாட்டார்கள். வீட்டின் வாசலில் தான் காற்றோட்டத்திற்காக படுப்பார்கள். வெயில் காலங்களில் வாசலில் திறந்த வெளியில் படுத்துக் கொள்வார்கள். வீட்டினுள் காற்றோட்டம் இல்லாமல் புளுக்கம் இதனால் குளிர்காலங்களில் கூட வீட்டின் முன்வாசலில் படுத்துக்கொள்வதை இவர்கள் தங்கள் பழக்கமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
இளமை சக்தி இருக்கும்வரை எந்த நோயும் உங்களை தாக்காது. சக்தி குறையும்போது இதுபோல வெளியே படுத்து தூங்குபவர்களுக்கு மூட்டுவலி நோய் ஏற்படுகிறது. வெயிலில் இது பாதிப்பு அடைவதில்லை. குளிர்காலங்களில் இந்த நோய் குளிர்ச்சி குளிர்ச்சி அதி தீவிரமான குளிர்ச்சியினால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து குளிர்ச்சித் தன்மையினால் இரத்த ஓட்டம் சீரான தன்மையிலிருந்து மதுவாக அதனால் நரம்பு தளர்ச்ச ஏற்பட்டு, இதன் மிகுதியினால் எக்குவா என்று சொல்லும் பாடி வாதம் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
எந்த சூழ்நிலையிலும் யாரும் எப்போதும் வெட்ட வெளியில் ! மொட்டை மாடியில் படுக்கக்கூடாது. தெரியாமல் படுத்து இருந்தால் இனி பதக்காதீர்கள். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இரவு நேரம் வாய் மறந்து தூங்குமாறு ஆகாயத்தில் சில சமயங்களில் காமா ரேஸ், எக்ஸ்ரே ரேஸ், வைலட் ரேஸ், போன்ற கதிர் இயக்கங்களில் அது வெட்ட வெளியில் அடர்ந்த அடர்த்தியின் பயங்கர தீவிரமான சக்தியுடன் புறப்படும் நிலையில் வெட்ட வெளியில் படுத்து தூங்குபவர்களை எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்களை இது தன் இச்சைக்குட்பட்டு தாக்கி சென்றுவிடும்.
காலையில் எழுந்து பார்த்தால், கைவராது. கால்வராது, முகம் இழந்து கிடக்கும், இந்த நிலையில் தான் பல நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். எப்படி இந்த நோய் ஏற்பட்டது? என்று நாம் கேட்கும்போது அவர்கள் இந்த கதையைச் சொல்லுகிறார்கள். வாத நோயும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோலவே மூட்டு வாத நோய் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு நேரிடலாம், எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் எந்த தோயும் வராது. பாதுகாப்புடன் வாழலாம்.
சிலர் எப்போது பார்த்தாலும் எதையாவது தின்று கொண்டே இருப்பார்கள். பசுமாடு அசைவு போடுவது போல அசைவு போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஓய்வு இல்லாமல் எதாவது நொறுக்குதீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதுபோல உள்ளவர்கள் நாளுக்கு நாள் உடல் எடை கூடிக் கொண்டே போய்விடும். உடல் குண்டாக காட்சி அளிப்பார்கள். உடல் பெருத்து இருக்கும். ஊழைச்சதை அதிகரிப்பதினால் குண்டாக காட்சி அளிப்பார்கள். உடல் எடையை தூக்கிக் கொண்டு அவர்களால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மற்றவர்களைப் போல உட்கார முடியவில்லை. மற்றவர்களைப் போல உடனே எழுந்திருக்கவும் முடியாமல் அவதிப்படுகிறார்கள் இது எதனால் என்றால்...?
ஊழைச் சதையினால் இவர்களுக்கு சர்வ சதாரணமாக முழங்கை, முழங்கால், மூட்டுவலி ஏற்படுகிறது. இதுபோல உள்ளவர்கள் கொழுப்பு உணவை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மாமிச உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். உப்பு குறைவாக இருக்க வேண்டும்.
தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சர்வ 5 சாதாரணமாக நடக்க வேண்டும். உடலில் உள்ள ஊழைச்சதை குறைய பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.நம்மால் உடலை குறைக்க முடியும் என்ற வைராக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment