ஒரு நோய் குணமடைய டாக்டருடைய ஒத்துழைப்பு மட்டும் போதாது, ஒரு நோய் குணமடைய நோயாளியின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் தேவை ஆகும். மருத்துவர் விலை உயர்ந்த தங்க பஸ்பம் கொடுத்து நோயை குணமாக்கி விடலாம் என்று திட்டம் தீட்டினாலும் நோயாளியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் தங்க பஸ்பம் வேலை செய்யாது.
தங்க பஸ்பத்துடன் நோயாளியின் ஒத்துழைப்பு விடாமுயற்சி இவைகள் இருந்தால் கண்டிப்பாக நோய் ஓடிவிடும்.ஒத்துழைப்பு இல்லாத சோம்பேறியுடன் நோய் தொடர்ந்து குடிகொண்டு இருக்கும்.
ஒத்துழைப்பு அளித்து நோய் முழுமையாக குணமாக வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உள்ள சுறுசுறுப்பாக உற்சாகம் உள்ளவனிடம் நோய் இவனுடைய விடா முயற்சியைக் கண்டு ஓடிவிடும்.
மருத்துவர் ஒரு மடங்கு பத்தியம் சொன்னால் இவர்கள் பத்து மடங்கு விடாமுயற்சியுடன் பத்தியத்துடன் இருந்து நோயை குணமாக்கிக் கொள்வார்கள். இறக்கும் நிலையில் கூட ஒரு நோயாளி தன் உயிர் பிழைத்துக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் விடா முயற்சி உற்சாகத்துடன் இருந்தால்,
பிரியக்கூடிய உயிர் கூட பிரியாமல் தங்கி இருக்கும். முயற்சி முயற்சி விடா முயற்சி. இவைகள் வெற்றி படிகள் ஆகும்.
தங்க பஸ்பத்தை பெற்றுக்கொண்ட நோயாளி மருந்து
சாப்பிட சோம்பேறித்தனப்படுவதுடன், எனக்கு எங்கே நல்லா ஆகப்போகின்றது. இனி நான் பிழைக்கவே மாட்டேன், எனக்கு வைத்தியம் செய்வதிலே பலன் பயன் இல்லை நான் பிழைக்க மாட்டேன் என்று சதா காலம் புலம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு நம்பிக்கை இல்லாத சோம்பேறித்தனம், விடாமுயற்சி இன்மை இவைகளினால் நோய் குணமடையாது எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு நோய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மன நோய் என்று நாம் அதை குறிப்பிடுவது உண்டு. முயற்சி உடையவனுக்கு விடா முயற்சி வைராக்கியம் உள்ளவர்களுக்கு மூட்டுநோய் தோன்றிய ஒரு சில மாதங்களில் குணமாக்கிக் கொள்கிறார்கள்.
விடா முயற்சி இல்லாத சோமிபேறிகளுக்கும், அசால்டாக உள்ளவர்களுக்கு மூட்டுவலி நோய் சிறுக சிறுக ஆரம்பித்து நாளடைவில் தீவிரம் அடைந்து பெரும் கஷ்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள். சுமார் 50 ரூபாயில் செலவில் முடியும் நோய் செலவை, இதுபோல கவனக் குறைவாய் இருப்பவர்கள் முற்றிய நிலையில் 5000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாக்கிக் கொள்கிறார்கள். குண்டுசியில் போக வேண்டிய நோயை கோடாளி கொண்டு வெட்டி எடுக்கும் கடுமையான கஷ்டமான நிலையை உருவாக்கிக் கொண்டு தத்தளிக்கிறார்கள்.
No comments:
Post a Comment