வெயில் காலங்களில் வெள்ளை பூசணிக்காயின் சாறு குடிக்க வேண்டும். கோவை பழம் சாப்பிடவேண்டும்.கோவை தண்டு கசாயம் வைத்து குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத் குடிக்கலாம்.
பார்லி அரிசி கஞ்சி" தினம் 2,3 வேளை குடிக்கலாம். கொழுப்பு வகையான உணவுகள் சாப்பிடாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.தேனும் + எலுமிச்சம் பழ சாறு கலந்து தினம் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சியை விடாமல் செய்து பழகுங்கள். நல்ல வேர்வை அதிகம் வெளியேறும்படியாக வேலை செய்யுங்கள். மூத்திரம், மலம், சிறப்புற வெளியேறும்படி அதற்குரிய உடற்பயிற்சிமேற்கொள்ளுங்கள். ஆசனப்பயிற்சிகளை செய்து பழகுங்கள்.
இதுபோல நீங்கள் செய்து வரும்போது உடல் குண்டாக இருக்கலாம். உங்களுக்கு மூட்டுவாத நோய் தாக்காமல் பாதுகாப்புடன் வாழலாம். அளவுடன் சாப்பிடவேண்டும். சுகமாக இரவு பகல் அதிகம் தூங்கக்கூடாது.
சிலருக்கு உணவு
கூட அவ்வளவு சிறப்பாக
உண்ணமாட்டார்கள். நேரா நேரம் சாப்பிடுவது, நன்றாக சுகமாகத் தூங்குவது,எந்த உழைப்பும் பொறுப்பும் இல்லாமலேயே பொழுதை போக்குவது அவருடைய பழக்கவழக்கமாகும்.
சிலர் உண்டு உறங்குவதினால், எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரித்தனமாக உண்டு உறங்கி வாழ்வதினால் நோய் ஏறிவிடும். உணவு அதற்குரிய உழைப்பு இது தான் இலக்கணம் ஆகும். செய்த உடம்பு சேவேரும் செய்யாத உடம்பு நோய்யேரும் என்பது தான் பொன்மொழி ஆகும்.
சோம்பேறிகளின் வாழ்க்கை நிலை ஒரு
வாழ்வா... உழைப்பே உயர்வு தரும். உழைப்பே ஒரு மனிதனுக்கு புருஷ லக்ஷ்ணம் ஆகும்.
உழைப்பில்லாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்கள் எப்போது பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டே எதையாவது சாப்பிட்டுக் கொண்டு சிறிய யானையைப் போல பெருத்த உடல், பெரிய பானைப் போல வயிறுடன் காட்சி அளிப்பார்கள். இவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். இது ஒன்றே குறிக்கோள் ஆகும். எதைப்பற்றியும் சிந்திக்கமாட்டார்கள். பணம் பணம் பணத்தை வைத்து இரவு பகல் காத்துக் கொண்டு பணத்தை வைத்துக்கொண்டே பணம் சம்பாதிக்கும் வட்டி கடை குண்டு ஆசாமிகளுக்கு மூட்டுவாதம் நோய் ஏற்படுகிறது. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. எழுந்தால் உட்கார முடியவில்லை. மூட்டுக்களில் நீர் கட்டு. தினம் தினம் மசாஜ் செய்துகொண்டே
இருப்பார்கள். நோய் இவர்களை விட்டு போகாது. கடைசி வரை நோய் இவர்களை விட்டு விலகாமல் அப்படியே இருந்து கொண்டுதான் இருக்கும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் இந்த நோய் இவர்களை விட்டு, போகாது. முழங்கால் ஒவ்வொன்றும் தூண் போல இருக்கும். இவர்களுடைய நோயை குணமாக்கவே முடியாது. நோயை குணமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியே இருக்காது.
No comments:
Post a Comment