Wednesday, 7 September 2022

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: ஒரு தாய் சொல்கிறார்கள்

நல்ல இளமையும் கட்டும் உள்ள சக்தி உள்ள பெண் ஆடி மாதத்தில் கருவடைந்துவிட்டால் இவளுக்கு சித்திரை மாதம் குழந்தை பிறந்தாலும் தாங்கும் சக்தி சிறப்பாக இருந்தது. இதைவிட்டு ஒரு மாதத்தில் ஏற்பட்ட கருவை வலிய ஏராளமாக பணம் கொடுத்து அபார்ஷன் செய்து கொண்டாள். கட்டிளம் காளை போல இருந்த பெண் அபார்ஷன் மூலமாக ஏராளமான இரத்தம் வெளியேற்றப்பட்டுவிட்டதனால் சத்து உடலில் குறைந்து ளிட்டது. குறிப்பாக நோயை எதிர்க்கக்கூடிய சத்து குறைந்துவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததினால் மூட்டு வலி வாதம் உள்ளே புகுந்துவிட்டு சிறுக சிறுக முதலில் மூட்டுக்களில் வலி தோன்றும், இதே சாதாரண வலி நாளடைவில் அதிக மூட்டு வலியை உருவாக்கிவிடும். இந்த மூட்டுவலியுடன் ஒவ்வொரு மூட்டுக்களிலும் வீக்கம் ஏற்பட்டு வருகின்றது. கருப்பை நோய்களுக்கும் மூட்டு வலிக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை நான் இங்கு விளக்கிக் கொண்டு இருக்கிறேன். இதனால் கருப்பை நோய் வராமல் இருக்க முன் எச்சரிக்கையுடன் வருமுன் காப்பது போல கருப்பை நோய் ஏற்பட்ட உடன் நல்ல லேடி டாக்டரிடம் காட்டி அதற்குரிய மருந்து மாத்திரைகளை முறையாக பத்தியத்துடன் இருந்து சாப்பிட வேண்டும்.

 

இரத்தப் போக்கு அதிகம் போவதினால்தான் மூட்டு வலி வருகின்றது என்பது உண்மை. இதைவிட ஒவ்வொரு மாதமும் முறையாக தூரம் ஆகவில்லையென்றாலும் மூட்டு வலி ஏற்படும்.

 

இன்றைய இளம்பெண்களுக்கு உடலிலே சத்து இல்லாததினால் தூரம் முறையாகப் போவதில்லை. டேங்கில் தண்ணீர் இருந்தால்தான் பைப்பில் தண்ணீர் வரும். உடலில் சத்து இல்லாததினால் கண்டும் காணாமல் தூரம் வெளிப்படுவதில்லை. கண்ணில் கூட சிலருக்கு தெரிவதில்லை. இளம்பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. சூதக வலி ஏற்படுகிறது. சூதகம் தேங்கி தங்கி வெளிப்படாததினால் சூதக வலி டைஸ்மெநோரியா ஏற்படுகிறது. இந்த சூதக வாயு ஒவ்வொரு மாதமும் தூரம் ஆகும்படி  செய்து வெளியேற்றினால் மூட்டுகளில் உள்ள வலி தானாகவே குறைந்துவிடும்.

இதனால் ஒரு மூட்டு வலி பெண் நோயாளி எங்களிடம் வந்தால் உடனே வைத்தியம் செய்வதில்லை. அதற்கு பதிலாக அவர்களுடைய பழைய நடவடிக்கைகள் என்ன நோயினால் இதற்கு முன்பு பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டார்கள்? என்ன மருந்து சாப்பிட்டார்கள். அவளுடைய பழக்கவழக்கங்கள் உணவு பழக்கவழக்கங்கள் கெட்ட பழக்க வழக்கங்கள் இவைகளை எல்லாம் சேகரித்து அவளுடைய சரித்திரத்தில் அவள் நடந்து வந்த பருவத்தில் எந்த இடத்தில் கோளாறு இருக்கிறது என்று தெரிந்து ஆராய்ந்து அவளுடைய இரத்தம், மூத்திரம், எக்ஸ்ரே இவைகள் அனைத்தும் தெரிந்து கொண்ட பின்புதான் நோய்க்கு மருந்து அளிப்பேன். மருந்து தொடங்க எப்படி ஐந்து நாள் ஆகிவிடும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டால் கண்டிப்பாக இனிப்பு வகையான உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது. அரிசி உணவுகளை குறைத்து ராகி, கோதுமை இவைகளை உணவில் முடிந்தவரை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீரழிவு நோய் ஆணுக்கு இருந்தாலும் சரி, பெண்ணுக்கு இருந்தாலும் சரி. உடலில் சேமித்து வைத்திருக்கும் சக்தியை அடிக்கடி இழக்கக் கூடாது.

சக்தியை சேமித்து சேர்த்து வைத்திருக்க வேண்டும். நல்ல மன நிம்மதியுடன் இரவில் நன்றாக தூங்க வேண்டும். போதும் என்ற மன நிறைவுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதிக கவலையுடன் இருக்கவே கூடாது. ஏமாற்றம் தோல்வி நஷ்டம் இவைகள் ஏற்படும்போது இவைகளைப் பற்றி அதே சிந்தனையுடன் சதா காலம் அதையே நினைத்துக் கொண்டு இருக்கக்கூடாது.

 

இரவில் அதிக மூத்திரம் வெளியேற்றாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.நீரழிவு நோய் மூத்திரத்திலும், நீரழிவு நோய் இரத்தத்திலும் பாதிக்கப்படும் நிலையில், இந்த நோய் தீவிரம் அடையும்போது நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறையும்போது மூட்டுகளில் வலி சாதாரணமாக ஏற்படுகிறது. இந்த சாதாரண வலியானது தீவிரம் அடைந்து மூட்டுக்களில் அதிக வேதனையுடன் வீக்கமும் தோன்றுகிறது.

 

நீரழிவு நோய் ஏற்படும்போது எப்போதும் மூட்டு வாதம் ஏற்படுவது இயல்பு, இது போலவே இரத்தக் கொதிப்பு நோய் ஏற்படுவதும், இயல்பு. ஒன்றை ஒன்று இணைந்து பிணைந்து சேர்த்து வாழக்கூடிய நிலையை உருவாக்கிக் கொள்வது இயல்பு.

நீரழிவு நோயாளிகளில் நீரழிவு நோய் வந்து இருந்தும், அதைப்பற்றி சிந்திக்காமல் மனஉறுதியுடன் தைரியத்துடன் மனம் தளராத முயற்சியுடன் இருந்தால் மூட்டுவலி நோய் ஒன்றும் செய்யாது.

 

நீரழிவு நோய் ஐயோ வந்துவிட்டது என்று பயந்தால்தான் இந்த நோய் தீவிரமாகிவிடும். இந்த நோய் தீவிரம் அடையும். நீரழிவு நோயை கண்டு கொள்ளாமல் இருந்தால், கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தால் பயப்படவே தேவை இல்லை. ஐயோ பயம் என்று பயந்தால்தான் நோய் தீவிரம் அடையும். நோய் தீவிரம் அடைந்து பெரும் கஷ்டத்தை உண்டாக்கும்.

 

நீரழிவு நோயை குணமாக்க முடியாது. நீரழிவு நோயை குணமாக்கிக் நான் காட்டுகிறேன் என்று மருத்துவர்கள் சாதாரணமாக சபதம் செய்பவர்களும் உண்டு.நீரழிவு நோயை சாதாரண முறையில் கட்டுப்படுத்தலாம். அவ்வளவுதான். முழுமையாக குணமாக்கவே முடியாது. நீரழிவு நோயை ஒரு வருடம், இரண்டு வருடம் நோய் வராத நிலையில் சற்று தடுத்து நிறுத்தலாம். இதை வேண்டுமென்றால் செய்யலாம்.


நோயாளிகள் இதை சிந்தித்து, கொண்டு செயல்பட ஆலோசித்து முடிவு நன்கு பலரிடம் வேண்டும்.நீரழிவு நோயாளிள் லட்டு, ஜிலேபி, மைசூர்பா சாப்பிடவே கூடாது.

தினம் காலை, மாலை = வெந்தயம் சாப்பிட்டு தண்னீர் குடிக்கலாம், வெந்தயத்தை பவுடர் செய்து வைத்துக்கொண்டு இதை சாப்பிட்டு அதற்கு மேல் மோர் குடிக்கலாம். வெந்தயத்திற்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இயற்கையான சத்து இருக்கிறது.

நீரழிவு நோயாளி எப்போதும் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். போதும் என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும்.வேண்டும், மேலும் வேண்டும், அதிகம் வேண்டும் என்ற ஆத்திரத்துடன் யார் ஒருவன் பேராசையுடன் வாழ்கின்றானோ, அவன் நீரழிவு நோயுடன் மூட்டு வலி நோயும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டே தீரும்.

மூட்டு வாத நோய் உடனே தோன்றாது. ஏதாவது ஒரு நோய் உடலுக்குள் மறைந்து இருக்கும். இதனை பிடித்து துணை கொண்டு இந்த நோய் பெரிய நோயாக மாறி கஷ்டத்தை உண்டாக்கும். இந்த நோய் வருவது சீக்கிரம் வந்து விடும். இந்த நோய் குணம் அடைய ஆறு மாதங்கள் ஆகும். சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகிவிடும். சிலருக்கு இரண்டு வருடங்கள் கூட ஆகிவிடுகிறது.

எத்தனை நாள் ஆனாலும் ஒரே மருத்துவரை நம்பி பத்தியம் இருந்து தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். சக்கரை இரத்தத்தில் அதிகமாய் இருக்கும் போது மூட்டுவலி அதிகமாய் இருக்கும்.

சக்கரை இரத்தத்தில் குறைந்து காணப்படும் போது மூட்டுவலி சற்று குறைவாகவே காணப்படும். மூட்டுவலியைக் கண்டு பயந்து கொண்டால் அது நம்மை பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிவிடும். மூட்டுவலி என்றால் பயப்படக்கூடாது. அதற்கு தீவிரமான சிகிச்சை மேற்கொண்டால் குணமாகிவிடும். மூட்டுவலி என்று தெரிந்து அதற்கு தக்க வைத்தியம் செய்யும் போது அது தீவிரம் அடையாமல் சற்று தாழ்ந்த நிலையில் தன்மையுடன் இருக்கும். மூட்டுவலியை ஒரேயடியாக விட்டுவிட்டால் தான் கடுமையான நோயாக மாறிவிடும். அவ்வப்போது மருத்துவம் செய்து கொண்டால் முன் எச்சரிக்கையுடன் இருந்தால் நோய் முற்றாது. சாதாரண செலவில் எளிதில் குணமாக்கிவிடலாம். புத்தி கூர்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment