எப்போதும் பகலில் எவ்வளவு கடுமையான வேலைகளையும் நாம் செய்யலாம். இரவில் நன்கு தூங்க வேண்டும். பகலில் சூரியனின் துணை கொண்டு ஆக்கப்பணிகள் அனைத்தும் அயராது செய்யலாம். பகலில் சூரியனுடன் போராடி, வேலைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டு உஷ்ணம் அடைந்த நிலையில் இரவில் சந்திரனின் குளிர்ந்த கதிர் இயக்கத்தின் சிறப்பால் உஷ்ணம் தளர்ந்த சோர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குளிர்ச்சித் தன்மையை அளித்து நரம்புகளுக்கு சக்தி அளித்து
மறுநாள் புதுத்தெம்புடன் சந்திரன் நமக்கு ஒரு மருத்துவரைப்போல தணை செய்து ஆக்கப் பணிகளுக்கு புது தெம்பு அளிக்கிறார். இதே நிலையில் இரவில் தூங்குவதற்கு பதிலாக மறுபடியும் கண் விழித்து வேலை தொடர்ந்து செய்வதினால் சக்தி குறைந்து தளர்ச்சி ஏற்படுகிறது. தளர்ச்சி ஏற்படுமாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நிலையில் மூட்டுவலி லேசாக ஆரம்பித்து சிறுக சிறுக இந்த நோய் தீவிரம் அடைந்து மூட்டு அழற்சி நோய் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் பகலில் வேலை செய்யுங்கள். இரவில் மூட்டுவலி இருப்பவர்கள் கண் விழித்து இரவில் வேலை செய்யாதீர்கள். அப்படி செய்தால் கண்டிப்பாக மறுபடியும் நோய் சீக்கிரம் குணம் அடையாது. மேலும் மேலும் வலியினால் வேதனை அதிகரிக்குமே தவிர குறையாது.
நீங்கள் வேலைக்குப் போகாமல் நல்ல ஓய்வுடன் இருங்கள் நான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் என்று சொல்லும்போது வயிறு இருக்கின்றதே பிழைப்பு நடத்த பணம் இல்லையே என்று சொல்லுவார்கள்.
வேலைக்கு போகவில்லை என்றால் எப்படி பிழைப்பது என்று கேட்பவர்கள் தான் அதிகம். சில நாட்கள் ஓய்வு இருந்து குணமாக்கிக் கொண்டு அதன் பின்பு வேலைக்கச் செல்லலாம், அதை விட்டு வேலை வேலை என்று ஓய்வு இல்லாமல் வேலை செய்யும் போது திடீர் என்று மயக்கம் வந்து விழுந்துவிட்டால் ஒரேயடியாக படுத்த படுக்கை ஆகி விடுமே. என்று சற்று நினைத்துப் பாருங்கள். விட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு டாங்கன வண்டி போல சிறுக சிறுக வாழ்க்கை வண்டியை மெதுவாக ஓட்டலாம். ஓய்வு இல்லாமல் வேலை செய்யும்போது சாதாரண நோய் ஆபரேசனில் போய் முடிந்துவிட்டால் எங்கும் சம்பாதிக்க வெளியே போகமுடியாதே. ஒரேயடியாக படுக்கையில் படுத்து ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமே.
இதை நோயாளிகள் அவசியம் சற்று சிந்திக்கவேண்டும். கடுமையான நோய் ஆஸ்பத்திரியில் படுக்கையில் ஒரு வாரம் படுத்து இருந்து ஓய்வு கொடுத்தால், அந்த நோய் ஒரே வாரத்தில் குணமடைந்து நோயாளி தன் வீட்டை நோக்கி ஓடுகின்றான் எப்படி எனில் ஓய்வுதான் காரணம். வருடக்கணக்கில் உழைக்கின்ற இந்த உடலுக்கு எப்போதும் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நோய் சீக்கிரம் குணமாகும்.
உடல் உழைப்பு ஒரு வகை உழைப்பாகும். மூளைக்கு கொடுப்பது, அதுவும் ஒரு வகை உழைப்பே வேலை ஆகும்.உதாரணத்திற்கு ஒரு சாதுவான வீட்டு பெண் மிக அமைகியாக ஒழுக்கத்துடன் வாழ்கின்றாள். இவளால் அந்த தெருவில் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. ஒரு நாள் எதிர் வீட்டு ரவுடி அந்த தாயைப் பார்த்து கூட்டம் கூட்டி கண்டபடி திட்டிவிடுகின்றான். இதைக் கேட்ட தாய் அவள் மனம் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அந்த ரவுடியைத்தான் மனதிற்குள் திட்டிக்கொண்டே இருக்கிறாள்.
ஒரு நாளைக்கு மூளை நரம்புகள் நூறுமுறை செயல்படுவதற்கு பதிலாக 1000 முறை அதி தீவிரமாக செயல்படுகிறது. இதனால் உடல் முழுவதும் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது. சக்தி குறையும்போது நோய் உள்ளே புகுந்து கொள்கிறது. சிறுக சிறுக இந்த நோய் ஆரம்பித்து பின் கடுமையான நோயாக மாறி பெரும் அவதியை உண்டாக்கி விடுகிறது. முதலில் நோய் இப்படித்தான் ஆரம்பித்து முற்றுகிறது.
அந்த ரவுடி திட்டினால் திட்டட்டும். கடவுள் இருக்கிறார், யார் நல்லவர், யார் கெட்டவர் என்று இறைவனுக்குத் தெரியும். அவரே பார்த்துக்கொள்ளட்டும் என்று இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் தைரியத்துடன் நம்முடைய முன்னேற்றப் பாதையை கவனிக்க வேண்டும்.
இதுபோலத்தான் சொந்தத்தில் நாம் எதார்த்தமாக கபடு சூது இல்லாமல் வெள்ளை மனதுடன் பேசுவோம். அதை சிலர் கண் மூக்கு வாய் வைத்து பெரிய பிரச்சனைக்கு நம் குற்றவாளியாக மாற்றிவிடுவார்கள். ஆகட்டுமே, பரவாயில்லை.அவர்களுடைய குணத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்படுகின்றது. அதைப்பற்றி சந்தோஷப்படுங்கள். ஒரு நல்ல வாய்ப்பு
நடப்பதெல்லாம் நல்லதற்குத்தான் என்ற மன பக்குவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.ஏதோ எதையோ உங்களைப் பற்றி சொல்லிவிட்டார்கள் என்பதற்காக மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள். இதனால் நாம்பு தளர்ச்சி அடைவதுடன், மூளைக்கு அதிக உஷ்ணம் ஏற்பட்டு, மூளை அதன் சிறப்பு திறமையான வேலைபாடுகளை அதன் சக்தியை இழந்துவருவதினால், இது போன்ற நோய் ஆரம்பித்ததில் லேசாக ஆரம்பித்து போக போக அது முற்றி பெரிய நோயாக மாற்றி அமைத்துக் கொள்கிறது.
மன்
தளர்ச்சி ஆகாது. மணமது செம்மையானால் மார்க்கம் உண்டு. மன தளர்ச்சி ஏற்பட்டால்
மரணம்தான் சம்பவிக்கும். மூட்டு சுழற்சி நோய் தீவிரம் அடையும்போது
மரணம் ஹார்ட்டு அட்டேக் சிலருக்கு சம்பவிக்க வாய்ப்பு ஏற்படுவது இயல்பு.
ஆறிலும் சாவு. அறுபதிலும் சாவு என்ற நினைவில் துணிந்து செயல்பட்டால் மரணம் உங்கள் பக்கம் வரவே வராது. உங்களுடைய மன உறுதியான திறமை, தைரியம் வாய்ந்த உங்களைக் கண்டு பயந்து இந்த நோய் ஓடி மறையும்.
இந்த நோயைப் பொருத்தவரை மரணம் என்பது உடனே ஆக்கக்கூடிய வியாதி அல்ல.மரணம் திடீர் என்று ஏற்படாது. அதற்கு பதிலாக நோய் தீவிரம் அடைந்து படுக்கையுடன் படுக்க வைத்துவிடும். சிறுக சிறுக வாதனை செய்து மூட்டுக்களில் வலி வீக்கம் கொடுத்து பயங்கர வேதனையைக் கொடுக்கும். காலை முதல் இரவு வரை எப்படியோ வேலைகளை செய்து சுதாரிக்கலாம்.
இரவில் படுத்து, காலையில் எழுந்திருக்கும்போதுதான் பயங்கர கஷ்டம் ஏற்படும். தூக்கம் தூங்கியபின்பு உடனே சாதாரணமாக எழுந்திருக்கவே முடியாது.
கை கால்கள் உடனே வேலை செய்து வணங்காது. கஷ்டப்பட்டு செயல்படுத்த வேண்டும். நீங்கள் காலை எழுந்தவுடன் கை கால்களை சுடுநீர் விட்டுத்தான் கை கால்களை சுத்தப்படுத்த வேண்டுமே தவிர குளிர்ந்த நீரினும் சுத்தப்படுத்தக் கூடாது. அதற்கு பின்பு கூட சாதாரண நீர் ஊற்றலாம். ஆனால் காலையில் எழுந்த நிலையில் சுடுநீர் தான் பயன்படுத்த வேண்டும்.
குளிர் காலங்களில் தேங்காய் எண்ணை கெட்டியாவது போல குளிர் காலங்களில் இந்த நோய், இந்த நோயை உருவாக்கும் சர்வாங்க வாத நீர் கெட்டித்தன்மை அடையும் வாய்ப்பு ஏற்படும்போது இந்த வியாதி குளிர்காலங்களில் கடுமையான வலியுடன் இருக்கும். வெயில் காலங்களில் தேங்காய் எண்ணை தண்ணீர் போல இருப்பதுபோல் இரத்த ஓட்டம் சீராக ஓடுவதுடன் கெட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படாத வகையில் வெய்யில் காலங்களில் இந்த நோய் தீவிரம் அடையாது, அதிக உபத்திரவம் அளிக்காது, குளிர் காலங்களில் தான் இந்த நோய் அதிக உபத்திரவம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment