Wednesday, 7 September 2022

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: மின்னுவதெல்லாம் பொன் என்று எண்ணி கண்ணிருந்தும் குருடானேன்

7, 14, 20 முதல் 21, 28, 35, 41, 49 இது போன்ற வயதுகளில் இந்த நோய் ஏற்படலாம். ஏழு வயதிற்கு ஒரு முறை இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்று சித்த வைத்திய களஞ்சியம் குறிப்பிடுகிறது.

இந்த நோய் பரம்பரை நோயா? என்று கேள்வி நீங்கள் கேட்கும்போது, இது எல்லோருக்கும் பரம்பரை நோய் அல்ல. ஆனால் Enter

பரம்பரை நோயாக  சில குடும்பங்களில் தொடர்ந்து காணப்படுகிறது. சில குடும்பங்களில் இது பரம்பரை நோயாகத் தோன்றுவதில்லை.

ஒரு சில குடும்பங்களில் அவர்கள் பரம்பரையில் இந்த நோய் ஏற்படவே இல்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டு வேதனையை சுமந்து கஷ்டப்படுகிறார்.

உடலில் நோயை எதிர்க்கும் சக்தி எப்போதும் போர் வீரனைப் போல செயல்பட வேண்டும். நோய் ஏற்படா வண்ணம் உடலை பேணி பாதுகாத்து முன் எச்சரிக்கையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த நோயும் நம்மை தாக்காமல் நாம் பாதுகாப்புடன் நல்ல முறையில் வாழமுடியும்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருந்தால், மின்னுவது எல்லாம் பொன் என்று மயங்கி அதற்கு அடிமையாக வாழ்ந்தாலும் நாம் பின் வாழ்க்கையில் அவதிப்பட வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு பள்ளி மாணவியை அவளுடைய பெற்றோர்கள் அவர்களுடைய சுயநலத்தையும், சுய இன்பத்தையும் பெற்று மகிழ்கின்றார்களே தவிர தன் குழந்தையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அந்த பெண் பிள்ளை சாப்பிட்டும், சாப்பிடாமலும், படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து சரிவர தூங்காமல் கஷ்டப்பட்டு முதல் மதிப்பெண் படிக்கிறது. பெற அயராது

இந்த நிலையில் டைபாயிட் காய்ச்சல் ஏற்பட்டுவிடுகின்றது. இந்த டையாயிட் நோயும் குணமாகிவிடுகின்றது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைக்கு இந்த நோய் தோன்றி தன்னிடம் இருந்த சக்தி முழுவதும் இந்த நோய் இழுத்துக்கொண்டது. இதனால் பலக்குறைவு அடைந்த பெண் பிள்ளைக்கு இந்த நோய் மறைந்து இருந்தாலும், உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததினால் சர்வாங்க நோய் லேசாக சிறுக சிறுக சக்தி இல்லாத உடலுக்குள் சென்று தங்கி இதன் ஆட்டத்தை சிறுக சிறுக காட்டி பின் நோய் தீவிரம் அடையும்போது மூட்டுக்கு மூட்டு நோய் வலி ஏற்பட்டு வேதனை அடைந்து அவதிப்படும்போது மருத்துவர்களிடம் அந்த பெண்ணை அழைத்துச் செல்கின்றார்கள் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள்.

நோய் முற்றி போய்விட்டது என்று டாக்டர் சொல்கின்றார். இந்த இடத்தில் ஒரு நோய் சாதாரணமாக இருந்தால் டாக்டர் உடனே ஒரு வாரத்தில் மருந்து கொடுத்து குணமாக்கி விடுகின்றார். நோய் முற்றிய நிலையில் டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது அந்த நோய் குணம் அடைய பல மாதங்கள் ஏற்படுகின்றது. டாக்டருக்கும் சிரமம். நோயாளிக்கும் நோய் சீக்கிரம் குணமாகவில்லையே என்ற மன கஷ்டம், பணக் கஷ்டம். இதற்கெல்லாம் காரணம், நோயாளியின் கவனக்குறைவே ஆகும். வரும் முன் காப்போம் என்ற முன் எச்சரிக்கையுடன் இருந்திருந்தால், டாக்டர் சீக்கிரம் குணமாக்கி விடுகின்றார். நோயாளிக்கு பணச்செலவு குறைந்து நோயும் குணமாகிவிடுகின்றது. இதனால் நோயாளிகளுக்கு இது முன் எச்சரிக்கை மிக அவசியம் தேவை. இதை விட பெற்றோர்களுக்கும் இந்த முன் எச்சரிக்கை மிக மிக அவசியம் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டையாய்ட்டு ஏற்பட்டபோதே அந்த பள்ளி பெண் பிள்ளைக்கு ஊட்ட சத்துக்கள் கொடுத்து, ஓய்வு கொடுத்து, நல்ல சுவையான உணவுகள் கொடுத்து நன்றாக தூங்கும்படிச் செய்து அதற்கு நல்ல தைரியம் சொல்வி அதற்கு துணையாக பெற்றோர்கள் இருந்து இருந்தால் மறுபடியும் மூட்டு வாதம் தோன்றி இருக்காது அல்லனா.... இப்படித்தான் இந்த நோய் ஏற்படுகின்றது.

ஒரு கல்லூரி மாணவிக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லை. கல்லூரி படிப்பு ஓய்வு இல்லாமல், அதிக படிப்பு சுமை. இதில் இந்த பெண் ஓட்டப்பந்தயத்தில் வீராங்கனை. தினமும் தொடர்ந்து ஓட்ட பந்தயப் பயிற்சி மேற்கொள்வது இந்த பெண்ணின் பழக்கமாகும். வேளா வேளைக்கு சரியாக சாப்பிடுவதில்லை. கல்லூரியிலிருந்து வந்தவுடன் அப்படியே துணிகளை கூட கழட்டிப் போடாமல் அலுப்பில் களைப்பில் தூங்கிவிடுவது இது இவளுடைய பழக்கமாக இருந்தது.

இந்த பெண் நல்ல விவரம் தெரிந்த வயது 19 இளம்பெண்தான். இவளுக்கு மாதா மாதம் மாத விலக்கு 7 நாளைக்கு இரத்தப்போக்கு இருந்து வந்து கொண்டு இருந்தது. இதை இந்த பெண் தன் பெற்றோர்களிடம் வெட்கம் என்று நினைத்து சொல்லவே இல்லை. இவளுடைய பெற்றோர்கள் இவளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர்களுடைய சுய நலத்தை வேலைகளை கவனித்து வந்தார்கள். தன் மகளுக்கு திருமணத்திற்கு நகைகளும் பணமும் சேர்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர தன் மகளின் ஆரோக்கியத்தை சிறிதும் கவனிக்கவே இல்லை.

நாளடைவில் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு அந்த கல்லூரி இளம் பெண்ணுக்கு மூட்டுக்கு மூட்டு வலி ஏற்பட்டு விட்டது.கல்லூரிக்குப் போகமுடியாமல் மூட்டுக்கு மூட்டு வலி ஏற்பட்டு காய்ச்சலினால், பல வாரங்கள் எழுந்திருக்க நிலையில்தான் ஏதோ பெரிய வியாதி ஏற்பட்டுள்ளது என்று முடியாத நினைத்து டாக்டரிடம் அழைத்துச் சென்று பெட்டில் சேர்த்தார்கள்.

அதுவரை கை வைத்தியம் செய்தார்கள். தூண்டு குணம் என்று எந்திரம் மந்திரம் பாடம் போட்டு பார்த்தார்கள். அப்போதும் அது குணமாகவில்லை. பெட்டில் சேர்ந்தபின்புதான் அவளுடைய பழைய சரித்திரத்தை கேட்கும்போதுதான் டாக்டர் மாதவிலக்கு மாதா மாதம் அதிக அளவு போய்கொண்டு இருக்கிறது என்ற உண்மையை சொன்னாள்.

கல்லூரிக்கு தொடர்ந்து அனுப்பாமல் பெட்டில் இருந்த நிலை அந்த பெண்ணின் ருமேட்டிஷம் என்று சாதாரண நோய் ஆர்த்தரைட்டீஸ் நோயாக பெரிய அளவில் மாறி, அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்குள் ஒரு பெரிய மருத்துவக் குழுவே அயராது கஷ்டப்பட்டு அந்த உயிரை காப்பாற்றினார்கள். அந்த மருத்துவக்குழு அடுத்த மாதம் அந்த பெண் அடுத்த மாத மாதவிலக்கில் இரத்தம் அதிகம் போனால் பெண் இறந்துவிடுவாள் என்று முன் எச்சரிக்கையாக வைத்தியம் செய்து கல்யாணத்திற்கு சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதும் இந்த நோய் குணமடையவே சரியாகி தீர்ந்துவிட்டது. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.

காப்பாற்றினார்கள். ஏராளமாக செலவு செய்தார்கள்.

நம் இந்திய நாட்டில் பொதுவாக அளவு கடந்த கடவுள் பக்தி உடையவர்களாக நாம் எல்லோரும் வாழையடி வாழையாக வாழ்கின்றோம்.

இதனால் நோய் என்று சொன்ன மாத்திரம் பேய் என்று பேயை ஓட்டுபவனை அழைத்து வந்து அவன் வேண்டுமென்றே பேய் பிடித்துக்கொண்டது என்று சொல்லி தேவையான அளவு பணம் பிடுங்கிக் கொண்டு பேயை ஓட்டிக் கொண்டு இருப்பான்.

பேய் ஓடாது... பேய் இருந்தால்தானே ஓடுவதற்கு.

எந்திரக்காரன் எந்திரம் கட்ட வேண்டும் என்று அவனுக்குத் தேவையான பணம் பெற்றுக் கொண்டு ஓடுவான். மந்திரம் கால் மதி முக்கா என்று சொல்லி சென்றுவிடுவான். மந்திரக்காரன் வருவான் செய்வினை செய்துவிட்டார்கள், செய்வினை செய்ததை எடுக்க வேண்டும் என்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை பிடுங்கிக் கொண்டு போய்விடுவான்.பாடம் போடுகிறவன், தாண்டு குணம் என்று அவனுக்குத் தேவையான பணம் வாங்கிக் கொண்டு போய்விடுவான்.

இப்படியாக பணம் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றி போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.இறந்தபின்பு பிணத்தை சுடுவதற்கு கூட விடாமல் பகிரங்கமாக ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டத்தைப் போன்றவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உயிரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி துணையாகஇருப்பதற்கு பதிலாக எரிகின்ற வீட்டில் பீடி பற்ற வைக்க நெருப்பு கேட்கும் இதயம் இல்லாதவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லமுடியாது.

நோய் உள்ளபோது உயிரோடு பிடுங்குபவர்கள்தான் இங்கு அதிகம். நீங்கள்தான் உங்கள் அறிவால் நல்லது கெட்டது அறிந்து தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் முன் அறிவுடன் இருக்கவேண்டும்.நோய்களுக்கு அது சம்பந்தமான படித்து தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க டாக்டர்களிடம் காட்டுங்கள். செலவு ஆனாலும்  பணம் பரவாயில்லை.

முதலில் தேர்ச்சி பெற்ற டாக்டர்களிடம் காட்டுங்கள். அதற்கு பின்பு நீங்கள் பாடம் மந்திரம் எந்திரம் உங்கள் ஆத்ம திருப்திக்கு தேவையான முறைகளை கடைபிடியுங்கள். இதனால் தவறு இல்லை. மந்திரத்தில் கடுமையான சர்வாங்கவாதம் இன்று குணமாகும். நாளை குணமாகும் என்று தினம் தினம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் நோய் உள்ளே தீவிரம் அடைந்து நாளுக்கு நாள் நோய் அதிக தீவரம் அடைந்து கடுமையான நிலையை உருவாக்கி விடுகின்றது.

இந்த கடுமையான நிலையில் தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டும்போது அவர் என்ன கடவுளா? மந்திரகாளி குச்சியைக் காட்டி மந்திரம் போட்ட உடன் நோய் ஓடிப் போய்விடுமா? எப்படி போகும்? சிறுக சிறுகத்தான் நோய் குணமாகும். உடனே குணமாகாது.

நோய் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த நோய் விட்டு போவதற்கு மூன்று மாத அவகரசம் வேண்டுமல்லவா... எப்படி உடனே போகும்? இதைவிட ஒரு முக்கியமான குறிப்பை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் நோயாளியின் அவல நிலையைப் பார்த்து, பரிதாபப்பட்டு நீங்கள் அதிக பணம் கொடுக்கின்றீர்கள் என்பதற்காக பெரிய மருந்து கொடுக்கமுடியாது. விலை உயர்ந்த பெரிய மருந்து இவர் உடலுக்கு ஒத்துக்கொள்கின்றதா? இல்லையா? என்பதை மருந்து வேலை செய்தபின்புதான் கூற முடியும். மருந்து ஒத்துக்கொள்ளவில்லை என்றால்,

உடனே டாக்டர் கைராசி இல்லை. அவர் மருந்து சரி இல்லை என்று நோயாளி வேறு டாக்டரை நோக்கி சென்றுவிடுவது வழக்கம். இதைவிட எந்த பின் விளைவுகள் இல்லாமல் நோய் சிறுக சிறுக குணம் அடைய நல்ல அனுபவம் உள்ள டாக்டர்கள் அணு அணுவாகத்தான் பரிசோதித்து மருந்து கொடுப்பார்கள்.

இதை நோயாளிகள் புரிந்து கொள்ளாமல் இவர் மிகவும் ஆமை வேகத்தில் தான் வைத்தியம் செய்கிறார் என்று கிண்டலாகவும் பலர் சொல்லுவது உண்டு. உங்கள் அவசரத்திற்கு நோய் போ என்றால் போய்விடாது.

அது வந்தது வேகமாகத்தான் வரும். போகும்போது அது மெதுவாகத்தான் போகும். ஒரு கட்டிடத்தை இடிப்பது ஒரே வாரத்தில் இடித்துவிடலாம். அதே கட்டிடத்தை கட்டுவது என்றால் பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இதை எல்லாம் நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். டாக்டர் மீது குறை

சொல்லக்கூடாது. எந்திரம், மந்திரம் எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் ஆத்ம திருப்திக்கு எதை வேண்டுமென்றாலும் செய்யுங்கள். முதலில் மருத்துவம்

செய்யுங்கள், பின் நீங்கள் செய்வதை செய்யுங்கள். இதுதான் முறையாகும். ஒரேயடியாக எந்திரம் மந்திரத்தை, மந்திரக்காரனை நம்பாதீர்கள், இதிலே அதிக மோசம் போனவர்கள் தான் அதிகம், லாபம் அடைந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள்.

அந்த காலத்தில் நம் பெரியவர்கள் வீட்டில் ஒரு மனைவியுடன் வாழ்ந்தாலும் வெளியே பல சிறிய வீடுகளை வைத்துக்கொண்டார்கள். சில ஆண்கள் 3,4,5 மனைவிகளை கூட திருமணம் செய்து கொண்டு ஆண்மையுடன் இன்புற்று வாழ்ந்தார்கள். சில மகாராஜாக்கள் 300 மனைவிகளை வைத்திருந்தார்கள் என்று கூட நாம் கேள்விபடுகின்றோம். 100, 200, 300 மனைவிகளை சுதாரிக்கக்கூடிய ஆண்மை வீரிய சக்திகளை தன்னுள் பெற்று மகிழ்ந்தார்கள். ஆண்மை இல்லாமல் இத்தனை மனைவிகளை வைத்து சுதாரிக்க முடியுமா? சற்று யோசித்துப்பாருங்கள். நம் முன்னோர்களின் வீர தீர பிரதாபங்களைப் பற்றி சிந்தித்தால், மெய்மறக்கச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வளவு வீர தீரர்களாக திகழ்ந்து வந்தார்கள். ஒரே சமயத்தில் ஒன்பது பெண்களை சுதாரித்து மகிழ்ந்தார்கள் என்று கூட நான் கேள்ளிப்பட்டு இருக்கிறேன்.

ஆண்களுக்கு இவ்வளவு சக்தி என்றால் பெண்களுக்கு இதைவிட பயங்கர சக்தி இயற்கையாய் பெற்று விளங்கினார்கள்.

சர்வசாதாரணமாக ஒரு பெண் பத்து குழந்தைகளைப் பெற்று எடுத்தார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு பெற்று எடுக்கின்றார்களோ, அவ்வளவுக்கு பெரும் பெயர் உண்டு. குழந்தைகளை திறமையான சாதனையான பெண் என்ற பெயரை மங்கையர்த் திலகமாக அன்று திகழ்ந்தார்கள். பெற்ற குழந்தைகளை பெற்ற அந்த தாய் ஒரு நாளும் காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி என்று நோயினால் படுக்கையில் 10, 15 அன்று படுக்கவில்லை. அப்படியே நோய் இருந்தாலும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல், எத்தனை வேலைகளையும் அவர்களே எந்த

வேலைக்காரியின் துணை இல்லாமல் அனைத்து சுயமான வேலைகளையும் திறமையுடன் செய்து வந்தார்கள்.

இவர்கள் இத்தனை குழந்தைகளைப் பெற்று எடுத்தபோது, சேர்த்து வைத்திருந்த அத்தனை சக்திகள் தாங்கள் வெளியேற்றப்பட்டு இருந்த சமயத்திலும் மூட்டு நோய் அவர்களைத் தாக்கவில்லை, பிரசவம் முடிந்த அடுத்த நாள் உடனே தங்கள் வேலையைக் கவனிப்பார்கள்.

உடலில் அத்தனை சக்திகள் வெளியேற்றப்பட்டபோதும் மனம் தளராமல் மறுபடியும் ஊட்ட சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு மறுபடியும் சக்தியுள்ள தயார் நிலையில் அடுத்து குழந்தை பிறக்க காத்துக்கொண்டு இருப்பார்கள்.

அன்று நம் தாய்மார்கள் அத்தனை குழந்தைகளை பெற்று எடுத்தார்கள்.இன்று நம் இளம்பெண்கள் கருப்பையை எடுத்துக் கொண்டு வாழ்கின்றார்கள்.

இந்த கொடுமையை நாம் எங்கு போய் சொல்லுவது? பள்ளியில் படிக்கும் மாணவி கல்லூரியில் படிக்கும் மாணவி, நவநாகரிகமாக இன்று அலங்காரம் செய்து யௌவன ராணிகளாக வாழ்கின்றார்கள். உண்மையில் இளமையில் இன்புற்றுதான் இருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை.

எந்த சூழ்நிலையிலும் முதலில் தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கற்பை காப்பாற்ற சில பெண்கள் தவறவிட்டுவிட்டு மற்றதையெல்லாம் ாப்பாற்றுகிறார்கள். இதிலே என்ன பயன்?...... ஒழுக்கம் உயர்வைத் தரும் என்பதை மறந்துவிடுகின்றார்கள். கேட்டால், மார்டன் கேர்ல்ஸ், அப்படித்தான் என்று சொல்கிறார்கள். மனம் போன போக்குப்படி நடந்து கொள்கின்றார்கள். இதில் இவர்களுக்கு பாதுகாப்பாக கருத்தடை மாத்திரைகள் துணை செய்கின்றது. கரு தடுப்பு முறைக்கு கருத்தடுப்பு மாத்திரைகளை அளவுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள்.

இன்று இந்த மாத்திரையினால், ஏதோ தப்பிக்கின்றார்கள். நாளை அடுத்த கட்ட வாழ்க்கையில் மூட்டு வலி நோயினால் அவதிப்படும்போதுதான் சிறிய வயதில் தாங்கள் செய்த தவறை நினைத்து வேதனைப்படுகிறார்கள்.

குடும்பம் என்றால் அதிலே பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.இன்றைய இளம் பெண்களிடம் டென்ஷன் மிக மிக அதிகம். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. சீரியசாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள். டென்ஷன். ..டென்ஷன் இதனால் உச்சி தலைமுதல் உள்ளங்கால் வரை உஷ்ணம் அதிகரித்து அந்த உஷ்ணம் முழுவதும் கருப்பையில் கொடி கொண்டு, அந்த உஷ்ணம் மேலும் தீவிரமடைந்து கருப்பையைத் தாக்கி ஒவ்வொரு ... மாதமும் மாதவிலக்கு அதிகமாக கொட்ட ஆரம்பித்து விடுகின்றது. ஒவ்வொரு மாதம் இப்படி தூரம் அதிக அளவு போகின்றதே என்று அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ளாமல், கவனக்குறைவாக அப்படியே விட்டுவிடுவதனால், சக்தி குறைகிறது. சக்தி குறைவதினால் ஒவ்வொரு மூட்டுக்களும் தன்னுடைய சக்தியுடன் செயல்படும் திறனை இழந்துவிடுகின்றது.

சக்தி குறைவினால் சிறுக சிறுக மூட்டுகளில் வலி ஏற்பட்டு அவைகளுக்கும் தக்க தீவிர சிகிச்சை அளிக்காமல் நாளடைவில் மூட்டு வலி லேசாக இருந்து வலி வீக்கத்துடன் தீவிரம் அடைந்து ஆத்தரைட்ட்டிஸ் மூட்டு வாத நோயாக மாறிவிடுகின்றது.இதே முறையில் பெண்கள் அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டு, அந்த சமயத்திலிருந்து தாங்கள் தப்பித்தாலும், நாளடைவில் அவைகள் மூட்டு வாதமாக மாறி கஷ்டப்படுகின்ற பெண்கள் அதிகம்.

No comments:

Post a Comment